விழுப்புரம்

9 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

தினமணி

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 9 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
 அதன்படி, விழுப்புரம் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர் கல்பனா விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும், ரூபி தேவசகாயராணி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், ஜோதிலட்சுமி திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், மரியசோமி மஞ்சுளா விழுப்புரம் நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
 இதேபோல, காவல் ஆய்வாளர் வளர்மதி மரக்காணம் காவல் நிலையத்துக்கும், மாலை உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், ரேவதி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர். மேலும், ஏழுமலை கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்துக்கும், விழுப்புரம் நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் வெங்கடேசன் கடலூர், ரெட்டிச்சாவடி காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT