விழுப்புரம்

தூய்மையே சேவை: வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் உறுதிமொழியேற்பு

தினமணி

கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை , தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் அலுவலர்கள் தூய்மையே சேவை எனும் உறுதிமொழியேற்றனர் .
 தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் தூய்மையே சேவை என்ற இலக்குடன் 15.9.17 முதல் 2.10.17வரை முனைப்பு இயக்கம் நடத்தவும் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு உத்தரவின் பேரில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டுவது தொடர்பாகவும், பள்ளிகள், கல்லூரிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள், மாணவர்களின் விடுதிகள், அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் துப்புரவுப் பணி மேற்கொள்வது தொடர்பாகவும் உறுதிமொழி மேற்கொண்டனர்.
 கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அ.கல்யாணசுந்தரம், புதுவாழ்வு திட்ட மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முஸ்தபா, ஜோசப், கணேசன், பார்வதி, உதவி பொறியாளர்கள் சரவணன், சாமிதுரை, ராஜசேகர், உதவி தணிக்கை அலுவலக மேற்பார்வையாளர் குமார், உதவி இயக்குநர் தணிக்கை அலுவலர்கள், ஊட்டச்சத்து அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர்கள், சத்துணவுப் பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று உறுதிமொழியேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT