விழுப்புரம்

செஞ்சி செல்வவிநாயகர் கோயிலில் லட்ச தீபத் திருவிழா 

தினமணி

செஞ்சி செல்வவிநாயகர் கோயில் 71-ஆம் ஆண்டு லட்ச தீபத் திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
 செஞ்சி பெரியகரம் பஜார் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 71-ஆம் ஆண்டு லட்சதீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
 அன்று காலை விநாயகருக்கு நெய், பால் தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 இதனை தொடர்ந்து மலர்களால் விநாயருக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை கோயில் வளாகத்தை சுற்றி லட்சதீபம் ஏற்றப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT