உலக புத்தக தின விழா
சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக புத்தக தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக புத்தக தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தேவபாண்டலம் கிளை நூலகம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, வாசகர் வட்டத் தலைவர் அ.து.சண்முகம் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியை இல.தமிழ்க்குயில், அரிமா சங்கத் தலைவர் வி.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட நூலக அலுவலர் (பொ) இரா.சுப்பிரமணியன், புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து, உறுப்பினர் மற்றும் புரவலர் சேர்க்கையைத் தொடக்கி வைத்து, உலக புத்தக தினம் குறித்துப் பேசினார். சமுதாய பொருளாதார தொண்டு நிறுவனச் செயலர் க.பெரியதம்பி, ரூ.3 ஆயிரம் மதிப்பில் 10 நாற்காலிகளையும், கார்குழலி கல்வி அறக்கட்டளைத் தலைவர் ராசு.தாமோதரன், ரூ.5 ஆயிரம் மதிப்பில் ஒரு நூல் அடுக்கையும் நன்கொடையாக வழங்கினர்.
அரிமா மாவட்டத் தலைவர்கள் வ.விஜயகுமார், தெய்வீகன், மருத்துவர் சிவலிங்கம் ஆகியோர் 100 பேருக்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.2 ஆயிரம் வழங்கினர். 10 பேர் தலா ரூ.1,000 செலுத்தி புரவலர்களாக இணைந்தனர். தொழிலதிபர் என்.எஸ்.இராமலிங்கம்பிள்ளை பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கினார். சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நூலகர் ந.மலர்க்கொடி நன்றி கூறினார்.