முகப்பு
விழுப்புரம்

பாஜகவினர் தமிழ்த் தாய் வழிபாடு

சித்ரா பௌர்ணமியையொட்டி,  விழுப்புரம் காந்தி சாலை பகுதியில் பாஜக சார்பில் தமிழ்த்தாய் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அங்கு, அலங்கரித்து

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சித்ரா பௌர்ணமியையொட்டி,  விழுப்புரம் காந்தி சாலை பகுதியில் பாஜக சார்பில் தமிழ்த்தாய் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அங்கு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தமிழ்த்தாய் உருவப்படத்துக்கு பாஜகவினர் மலர் தூவி வணங்கினர் .
நகரத் தலைவர் பழனி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சுகுமார், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தொழில் பிரிவு தலைவர் ஜோதிராஜா, ஓ.பி.சி. பிரிவு மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட அறிவு சார் பிரிவு மாவட்டத் தலைவர் தனசேகரன், கோட்டப் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர்கள் சக்திவேல், சரண்யா, வளவனூர் நகரத் தலைவர் ஆனந்தன், காணை ஒன்றியத் தலைவர் சுந்தர்ராஜன், கூட்டுறவு அணி மாவட்டத் தலைவர் கனபிச்சைப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →