முகப்பு
விழுப்புரம்

மாவட்ட விளையாட்டுப் போட்டி:  இந்திலி கல்வியியல் கல்லூரி வெற்றி

மாவட்ட அளவில் கல்வியில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இந்திலி  ஆர்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரி கோப்பையை வென்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

மாவட்ட அளவில் கல்வியில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் இந்திலி  ஆர்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரி கோப்பையை வென்றது.
தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் சார்பில், கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆர்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட அளவிளான விளையாட்டு, கலைப் போட்டிகள் கடந்த 2,3-ஆம் தேதிகளில்  நடைபெற்றன. இதில், 18 கல்வியியல் கல்லூரிகள் பங்கேற்றன.
விளையாட்டுப் போட்டியை கள்ளக்குறிச்சி அரிமா சங்கத் தலைவர் கே.மருதை தொடக்கி வைத்தார். கலைப் போட்டிகளின் நடுவர்களாக கோவிந்தராஜ், மலரடியான், சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
3-ஆம் தேதி நடைபெற்ற போட்டிக்கு ஆர்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். பல்கலைக்கழக இணைப் பதிவாளர் மோகன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக கல்வி உலவியல் துறைத் தலைவர் என்.கோவிந்தன், கல்லூரி இணை இயக்குநர் கே.பி.ஆர்.பாலகிருஷ்ணன், வழக்குரைஞர் கோகுல்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் அ.சண்முகம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு கலந்து கொண்டு, விளையாட்டு, கலைப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டியதுடன், பேசினார்.
நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜி.எஸ்.குமார், கல்லூரிச் செயலர் கோவிந்தராஜூ, ஆர்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் கு.மோகனசுந்தர், கல்லூரியின் இயக்குநர் கே.பி.ஆர்.ரவி, துணை முதல்வர் பெ.ஜான்விக்டர்,  வீட்டு வசதி சங்கத் தலைவர் சி.பால்ராஜ், விவசாய வங்கியின் தலைவர் அ.ரங்கன், சி.எம்.எஸ் வங்கியின் துணைத் தலைவர் ஜெ.கோபி, மாவட்ட மாணவரணிச் செயலர் க.சீனுவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
விளையாட்டுப் போட்டிகளுக்கான முழுமையான கோப்பையை ஆர்.கே.எஸ். கல்வியில் கல்லூரி மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று வென்றனர். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் டி.பாலு நன்றி கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →