விழுப்புரம்

"திட்டங்களை செயல்படுத்தாமல் முறைகேடாக அறிவிப்பு' 

தினமணி

திமுக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திட்டங்களை செயல்படுத்தாமல் முறைகேடாக அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
 இது குறித்து, அதிமுக பிரமுகர் வி.ரங்கநாதன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு: செஞ்சி பேரூராட்சியில் 2016-17-ஆம் ஆண்டு வார்டுகளில் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றியதாக பட்டியலிட்டு, பேரூராட்சி சார்பில் கடந்த ஆண்டு ஜூலை
 20-ல் விளம்பரம் செய்துள்ளனர். திமுக எம்.எல்.ஏ. மஸ்தான் தொகுதி மேம்பாட்டு நிதியில் (2016-17) இருந்து செஞ்சி வார்டு எண் 1-ல், மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் ரூ.5.20 லட்சத்தில் வடிகால், சிமென்ட் சாலை உள்ளிட்ட 9 பணிகளை ரூ.30 லட்சம் மதிப்பில் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், பேரூராட்சி சார்பில் அறிவித்துள்ளபடி எந்த இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொறுப்பு) ராஜேந்திரன், ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT