முகப்பு
விழுப்புரம்

அரசு இசைப் பள்ளியில் காசநோய் விழிப்புணர்வு

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட காசநோய் மையத்தின் சார்பில் காசநோய் வார விழாவையொட்டி, காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் கலையரசி தலைமை வகித்தார்.
 ஆசிரியர்கள் முருகையன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாவட்ட காசநோய் நலக் கல்வியாளர் மஹபூப்பாஷா, காசநோய் அறிகுறிகள் பரவும் விதம், தடுக்கும் வழிமுறைகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் குமார், காசநோய் கண்டறியும் விதம், சிகிச்சை மையங்கள் குறித்து விளக்கினார்.
 முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செந்தமிழ்தாசன், சளிப் பரிசோதனைகள், எக்ஸ்ரே பரிசோதனை குறித்து விளக்கமளித்தார். கூட்டத்தில் காசநோய் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
 பள்ளி ஆசிரியர்கள் காஞ்சனா, ராஜன் பிரகாசன், தமிழ்ச்செல்வன், பிரகாஷ், ரமேஷ்குமார், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →