முகப்பு
விழுப்புரம்

மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி

திருக்கோவிலூர், சங்கராபுரம், கண்டாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

திருக்கோவிலூர், சங்கராபுரம், கண்டாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
 உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கவும், அவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு "என்னை செதுக்கிய நூல்கள்' என்ற தலைப்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் கட்டுரைப் போட்டியை நடத்த பொது நூலகத் துறை அறிவித்தது.
 இதையடுத்து, மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன் அறிவுரைப்படி திருக்கோவிலூர், சங்கராபுரம், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில், நூலகங்கள் சார்பில் இப்போட்டி புதன்கிழமை நடத்தப்பட்டது.
 திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியை, சார்-ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டார்.
 அப்போது, திருக்கோவிலூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியன். நல்நூலகர்மு.அன்பழகன், நூலகர் மு.சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →