விழுப்புரம்

மாற்றுத் திறன் மாணவர்களுக்கு பொங்கல் புத்தாடை அளிப்பு

DIN

விழுப்புரம் இந்திரா நகர் செயின்ட் ஜான் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி நிர்வாகி
ஏ.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் புவனா வரவேற்றார். விழுப்புரம் மாவட் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பங்கேற்று, பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாற்றுத் திறன் மாணவர்கள், ஆசிரியர்கள் சேர்ந்து புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர். இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு கரும்பு, இனிப்பு, பொங்கல் உணவு வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் புத்தாடைகளை காவல் கண்காணிப்பாளர் வழங்கி பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT