விழுப்புரம்

ஆர்.கே.எஸ். கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

இந்திலி டாக்டர் ஆர்.கே. சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் 2, 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் ஊக்குவிப்பு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கு.மோகனசுந்தர் தலைமை வகித்தார். துணை முதல்வர் பெ.ஜான்விக்டர் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சின்னசேலம் வாசவி கிளப் உறுப்பினரும், ஊக்குவிப்பாளருமான பாலமுருகன் பங்கேற்று மாணவர்களுக்கு மன அழுத்தம் குறித்தும், புத்தாக்கப் பயிற்சிகள் அளித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆர்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் கல்லூரி மாணவர்கள், பாராமெடிக்கல் மாணவிகள், மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தமிழ்த் துறை முனைவர் மு.ரஞ்சித்குமார் தொகுத்து வழங்கினார். நிறைவில் வேதியியல் துறை மாணவி அமுதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT