வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவம் தொடக்கம்
விழுப்புரம் நகரில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீ ஜனகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் நகரில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீ ஜனகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மாலையில் பகவத் அனுக்ஞை, மிருத் ஸங்கிரனம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, கருடப்ரதிஷ்டை ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தொடர்ந்து, திங்கள்கிழமை காலை கொடி மர பூஜை நடைபெறும். அதன்பிறகு அம்ஸ வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம் என நாள்தோறும் பெருமாள் விஷேச வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வருகிற 27-ஆம் தேதி திருப்பல்லக்கு, திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வீதி உலா 29-ஆம் தேதி நடைபெறும். வைகாசி பிரம்மோத்ஸவம் வருகிற 31-ஆம் தேதி திருமஞ்சனம், புஷ்பயாகம், விடையாற்றி உற்சவத்துடன் நிறைவடைகிறது.
இவ்விழாவையொட்டி, கோயில் முழுவதும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.