முகப்பு
விழுப்புரம்

இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு, கேரள மாநில அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:54 AM
பகிர்:

மத்திய அரசு, கேரள மாநில அரசைக் கண்டித்து விழுப்புரத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்திட்ட வளாகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சாய் கமல் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சாமிநாதன், மாநில இளைஞரணி செயலாளர் பரணிதரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

 மத நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதைத் தடுக்க, நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும், அரசியல் லாபத்துக்காக, சபரிமலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக மத்திய அரசை கண்டித்தும் மற்றும் கேரள அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

Advertisement

திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் விஜயராஜ், புதுச்சேரி மாநிலத் தலைவர் பாலு, மாவட்ட பொருளாளர் பாலாஜி, மாவட்ட அமைப்பாளர் குமரவேல் உள்ளிடோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். நகரத் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.