விழுப்புரம்

கோயில்களில் நவராத்திரி நிறைவு விழா

DIN

அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி திருவிழா 11-ஆம் நாளான சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.  இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி கொலு மண்டபத்தில் திரு ஊஞ்சலில் அமர்த்தி  ஊஞ்சல் சேவை நடைபெற்றது. லாலி சௌடாம்பா லாலி என்ற லாலி பாடலும், ஸ்ரீலீலா கிரிபலா என்ற எச்சரிக்கை பாடலும் இசையுடன் குழுவாகப் பாடப்பட்டது. இதனை தொடர்ந்து, கொலு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய அறக்கட்டளை, பௌர்ணமி அமாவாசைக் குழுவினர் செய்திருந்தனர்.
பகவதி அம்மன் பீடத்தில்: உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை பகவதி அம்மன் பீடத்தில் நவராத்திரி நிறைவு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பகவதி பீட குருஜி பகவதி சுவாமிகள் தலைமையில் அம்மனுக்கு தினமும் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. 
நவராத்திரி விழா நாள்களில் உலக மக்கள் நலன் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கல்வி ஞானம் குழந்தைகளுக்கு கிடைக்க வலியுறுத்தியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட மக்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT