விழுப்புரம்

ரிஷிவந்தியத்தில் போலி மருத்துவர் கைது

தினமணி

விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில் மருந்துக் கடையில் நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
 ரிஷிவந்தியம் பிரதான சாலையில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் விதிகளை மீறி ஒருவர் மருத்துவச் சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, சுகாதாரத் துறை இணை இயக்குநர் சுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை மாலை அங்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
 அப்போது, ரிஷிவந்தியம் வடக்கு வீதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ராமமூர்த்தி (32) என்பவர், டிப்ளமோ பார்மாசிஸ்ட் (டி.பார்ம்) படித்துவிட்டு, மருந்துக் கடை நடத்தி வருவதும் அந்தக் கடையில் ஆங்கில மருத்துவரைப் போல, நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரைகளை வழங்கி வந்ததும் தெரியவந்தது. மேலும், நோயாளிகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி குளுகோஸ் மருந்தையும் ஏற்றியுள்ளார்.
 இதையடுத்து, அவரை சுகாதாரத்துறைக் குழுவினர் பிடித்து ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இணை இயக்குநர் சுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில், அவரை போலீஸார் கைது செய்தனர். மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT