விழுப்புரம்

ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியைப் பிடிக்கும்: கனிமொழி எம்.பி.

தினமணி

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று திண்டிவனத்தில் அக்கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. கூறினார்.
 அதிமுக அரசைக் கண்டித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், திண்டிவனம் வண்டிமேடு வ.உ.சி. திடலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மாவட்டச் செயலர் கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ தலைமை வகித்தார். இரா.மாசிலாமணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சீத்தாபதி சொக்கலிங்கம் எம்எல்ஏ வரவேற்றார்.
 ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு தமிழக அரசைக் கண்டித்து உரையாற்றினார்.
 பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது.
 ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
 முதல்வர், துணை முதல்வர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. மத்திய பாஜக அரசு மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
 தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.
 ஆர்ப்பாட்டத்தில் மாநில மருத்துவரணி துணைச் செயலர் பா.சேகர், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.விஜயகுமார், எல்.பி.நெடுஞ்செழியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சேதுநாதன், பா.செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் என்.நமச்சிவாயம், மாவட்ட துணைச் செயலர்கள் ஆ.ரவிக்குமார், ப.வசந்தா, மாநில பொதுக் குழு உறுப்பினர் என்.ரமணன், மாவட்ட இலக்கிய அணி சீனி.ராஜ், மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு அணி கே.எஸ்.அன்சாரி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகரச் செயலர் ந.கபிலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT