விழுப்புரம்

வெள்ளிமேடுப்பேட்டையில் தொடர் திருட்டு: 4 பேர் கைது

தினமணி

திண்டிவனம் அருகேயுள்ள வெள்ளிமேடுப்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 வெள்ளிமேடுப்பேட்டை பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களை அடுத்து, உதவி ஆய்வாளர்கள் பாக்கியலட்சுமி, குமரேசன், காவலர்கள் முஜிபுர்ரகுமான் உள்ளிட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, திண்டிவனம் அருகேயுள்ள கொங்கரப்பட்டு சிவானந்தம் மகன் அஜித், ரெட்டணை தனசேகர் மகன் ஐயனார், வானூர் ராசு மகன் சிவராமன், மேல்சேவூர் சுந்தரமூர்த்தி மகன் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், வெள்ளிமேடுப்பேட்டை பகுதியில் 2 மின்மோட்டார்கள், மோட்டார் சைக்கிள்கள், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சென்ட்ரிங் தகடுகள், தாதாபுரம் கோயில் உண்டியலில் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த வெள்ளிமேடுப்பேட்டை போலீஸார், அவர்களிடமிருந்து 2 நீர் மோட்டார்கள், சென்ட்ரிங் தகடுகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அவர்களை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT