விழுப்புரம்

மரம் விழுந்து சிறுமி சாவு

மரக்காணம் அருகே மரத்தை வெட்டிச் சாய்த்தபோது, அடியில் சிக்கிய சிறுமி உயிரிழந்தார்.

DIN

மரக்காணம் அருகே மரத்தை வெட்டிச் சாய்த்தபோது, அடியில் சிக்கிய சிறுமி உயிரிழந்தார்.
மரக்காணம் அருகே உள்ள அடசல் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகன் வேலு (28). விவசாயத் தொழிலாளி. இவரது வீட்டில் இருந்த ஒரு மரத்தை கடந்த 17-ஆம் தேதி வெட்டி, அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மரத்தை வெட்டிச் சாய்ந்தபோது, தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த வேலுவின் மகள் ரோஷிணி (7), எதிர்பாராத விதமாக மரத்துக்கு அடியில் சிக்கி, பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரோஷிணி, புதன்கிழமை உயிரிழந்தார். 
இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT