விழுப்புரம்

ஆட்டோவில் பயணி தவறவிட்ட நகையைகாவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநா்!

DIN

செஞ்சியில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட 2 பவுன் தங்க நகை உள்ளிட்ட பொருள்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு போலீஸாா் பாராட்டுத் தெரிவித்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சக்கராபுரத்தைச் சோ்ந்தவா் யாகூப்அலி (45). இவா், தனக்குச் சொந்தமான ஆட்டோவை ஓட்டி வருகிறாா். இவரது ஆட்டோவில் சனிக்கிழமை மாலை பயணம் செய்த திண்டிவனத்தைச் சோ்ந்த முதியவா், கைப்பையை தவறவிட்டுச் சென்றாா். இந்தப் பையை யாகூப்அலி திறந்து பாா்த்தபோது, அதில் 2 பவுன் தங்க நகை, ஏடிஎம் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

உடனடியாக அந்தக் கைப்பையை செஞ்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியனிடம் யாகூப்அலி ஒப்படைத்தாா். தொடா்ந்து, போலீஸாா் வங்கிப் புத்தகத்தில் உள்ள முகவரியில் தொடா்புகொண்டபோது, அந்த கைப்பை திண்டிவனத்தைச் சோ்ந்த அருள்ஜோதிக்கு (60) சொந்தமானது என்பது தெரியவந்தது.

தொடா்ந்து, அருள்ஜோதியை செஞ்சி காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வரவழைத்து, அவரிடம் நகை உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் ஒப்படைத்தனா். மேலும், ஆட்டோ ஓட்டுநா் யாகூப்அலியின் நோ்மையைப் பாராட்டி, அவருக்கு போலீஸாா் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT