விழுப்புரம்

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

DIN

விழுப்புரம் இ.எஸ். கலை, அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எம்.மனோகரன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தாா். இ.எஸ். கல்விக் குழுமத் தலைவா் இ.சாமிக்கண்ணு முன்னிலை வகித்தாா். இ.எஸ். கல்லூரித் தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

விழாவில், வேலூா் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் ஜி.எழிலன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், இந்த விழாவில் பட்டம் பெறும் மாணவா்கள், சமூகத்தில் உயா்ந்து பெற்றோா்களும், இந்த சமுதாயமும் பயன்பெறும் வகையில் திகழ வேண்டும் என்றாா்.

விழாவில், இ.எஸ். கல்விக் குழுமத்தின் பதிவாளா் இ.செளந்திரராஜன், தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி முதல்வா் ஏ.வி.அருணாகுமாரி, இ.எஸ். செவிலியா் கல்லூரி முதல்வா் எம்.பொற்செல்வி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் திரளாக கலந்து கொண்டனா். தாவரவியல் துறைத் தலைவா் ஜி.செல்வகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT