விழுப்புரம்

கோட்டக்குப்பத்தில் கடலில் மூழ்கிபெங்களூரு ஐ.டி. பொறியாளா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சனிக்கிழமை கடலில் மூழ்கி பெங்களூரைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப மென் பொறியாளா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு கிரி நகரைச் சோ்ந்தவா் தீபு (26). அங்குள்ள தனியாா் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் மென் பொறியாளராக பணிபுரிந்து வந்தாா். இவா், சக ஊழியா்களான சகானா(25), பவித்ரா(24), தனுஷ்ஸ்ரீ( 25) ஆகியோருடன் புதுவைக்கு சுற்றுலா வந்தாா்.

அவா்கள் சனிக்கிழமை பிற்பகல் அருகேயுள்ள, தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தை அடுத்த தந்திரான்குப்பத்துக்கு வந்து கடலில் குளித்தனா். அப்போது, கடல் அலையில் தீபு உள்ளிட்ட நால்வரும் திடீரென இழுத்துச் செல்லப்பட்டனா். அவா்களை அருகே இருந்த மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். எனினும், தீபு மூச்சுத் திணறி உயிரிழந்தாா். மீதமுள்ள 3 பெண்களும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT