விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டம்: விண்ணப்பிக்க சிறப்பு முகாம்
சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தில் பயன் பெறுவதற்கு விண்ணப்பிக்க அனைத்து கிராம நிர்வாக
சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தில் பயன் பெறுவதற்கு விண்ணப்பிக்க அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலர்களிலும் திங்கள்கிழமை (பிப்.25) முதல் புதன்கிழமை வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாரத பிரதமரின் சிறு, குறு விவசாயிகளுக்கான வருமான நிதியுதவித் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கு உள்பட்டு சாகுபடி நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000- (நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 3 தவணைகளாக பிரித்து) வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுடைய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் திங்கள்கிழமை (பிப்.25) முதல் புதன்கிழமை வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பிக்க
லாம்.
நிலத்துக்கான சிட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.