விழுப்புரம்

பெரியார் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

DIN

கல்வராயன்மலைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த மழையால் பெரியார் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
 கடந்த சில மாதங்களாக, கல்வராயன்மலைப் பகுதியில் மழை பெய்யாததால் பெரியார் அருவி தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சியளித்தது. இந்த நிலையில், சனிக்கிழமை (மார்ச் 2) திடீரென 2 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் பெரியார் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கியது.
 ஞாயிற்றுக்கிழமை கல்வராயன்மலைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து கார், மோட்டார் சைக்கிளில் வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்தனர்.
 இந்த தண்ணீர் கச்சிராயப்பாளையம் கோமுகி அணைக்கு வாய்க்கால் வழியாகச் செல்கிறது.
 இருப்பினும், நிகழாண்டில், மழை இல்லாததால் அணை வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT