விழுப்புரம்

முடியனூரில் தூக்குத்தேர் திருவிழா

DIN

கள்ளக்குறிச்சி வட்டம், முடியனூர் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, 61 அடி உயரமுள்ள தூக்குத்தேர் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல, நிகழாண்டு திருவிழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கோயிலின் முன் பாரதம் பாடப்பட்டு வருகிறது. தினந்தோறும் இரவு பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.
 இந்த நிலையில், வியாழக்கிழமை காலை திரெளபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதையடுத்து, 61அடி உயரமுள்ள தூக்குத்தேரில் திரெளபதி அம்மன் சமேத அர்சுணர் சுவாமி எழுந்தருளினார்.
 பின்னர், இந்தத் தேரை தோள்களில் சுமந்தவாறு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் சென்றனர். திரளான ஊர் பொதுமக்கள் ஆங்காங்கே கூடி நின்று சுவாமியை வழிபட்டனர்.
 பெண்கள் கோயிலில் மாவிலக்கிட்டு வழிபட்டனர். வெள்ளிக்கிழமை (மே 17) தீமிதி விழாவும், சனிக்கிழமை (மே 18) மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT