விழுப்புரம்

பள்ளித்தென்னல் ஊராட்சியில் கிராம வங்கி திறப்பு

DIN

கண்டமங்கலம் ஒன்றியம், பள்ளித்தென்னல் ஊராட்சியில் தமிழ்நாடு கிராம வங்கியின் புதிய கிளை அண்மையில் திறக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன் வங்கிக் கிளையைத் திறந்து வைத்து பேசியதாவது: பள்ளித்தென்னல் கிராமத்தில் விவசாயிகள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள், சிறு, குறு தொழில் முனைவோா் எளிய முறையில் கடன் பெற்று பயனடையும் வகையில், இங்கு தற்போது தமிழ்நாடு கிராம வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.

எனவே, கிராம மக்களும், விவசாயிகளும் இதுபோன்ற அரசு வங்கிகளில் தங்களது சேமிப்பு கணக்குகளைத் தொடங்கி, சம்பாதித்த பணத்தை அதில் முதலீடு செய்து, தேவைக்கேற்ப கடனுதவி பெற்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடனுக்கான தவணைத் தொகையை சரியான முறையில் செலுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி இயக்குநா் (ஊராட்சி) ஜோதி, முன்னோடி வங்கி மேலாளா் சேதுராமன், வட்டார வங்கி மேலாளா் ரவிச்சந்திரன், வங்கிக் கிளை மேலாளா் சுஜாதா மற்றும் வங்கி ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT