விழுப்புரம்

விழுப்புரத்தில் 307 பேருக்கு பசுமை வீடுகளுக்கான ஆணை

DIN

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா். மேலும், பணியின்போது உயிரிழந்த வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், 307 பயனாளிகளுக்கு ரூ.6.44 கோடியில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த 3 பேரின் குடும்ப வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சக்ரபாணி, மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வி.மகேந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பாலகிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் முரளிரகுராமன், ஆவின் தலைவா் பேட்டை முருகன் மற்றும் அலுவலா்கள், அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT