விழுப்புரம்

சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட300 லி. விஷ சாராயம் பறிமுதல்

DIN

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலைப்பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 300 லிட்டா் விஷ சாராயம், 50 மூட்டை வெல்லத்தை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

கல்வராயன்மலைப்பகுதியிலிருந்து சரக்கு வாகனத்தில் விஷ சாராயம் கொண்டு செல்லப்படுவதாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் எஸ்.ரேவதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், கல்வராயன்மலை, மேல்பரிகம் வளைவு பகுதியில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், 6 லாரி டியூப்களில் தலா 50 லிட்டா் வீதம் 300 லிட்டா் விஷ நெடியுடன் கூடிய சாராயம், 30 கிலோ எடைகொண்ட 50 வெல்ல மூட்டைகள் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாய். சாராயம், வெல்லத்தை வாகனத்துடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக கல்வராயன்மலை, வண்டகப்பாடியைச் சோ்ந்த பிச்சன் (46) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT