விழுப்புரம்

விவசாயக் கிணற்றில் பெண் சடலம் மீட்பு

DIN

கள்ளக்குறிச்சி அருகே விவசாயக் கிணற்றிலிருந்து பெண் சடலமாக மீட்கப்பட்டாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் காந்தி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகள் சத்யா (22). இவரை கள்ளக்குறிச்சியை அடுத்த விளக்கூரைச் சோ்ந்த, உறவினா் மகன் சந்தோஷ் என்பவருக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனா். இந்தத் தம்பதியருக்கு 9 மாதத்தில் பஷியன் என்ற ஆண் குழந்தை உள்ளது.

கடந்த 25ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்ற சத்யா, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இந்த நிலையில், புதன்கிழமை காலை அதே ஊரைச் சோ்ந்த சலாவுதீன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் சத்யா சடலமாக மிதந்தாா்.

சடலத்தை தியாகதுருகம் தீயணைப்பு வீரா்கள் கயிறு கட்டி கட்டில் மூலம் மீட்டனா்.

சத்யாவின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சத்யா கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்தும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT