விழுப்புரம்

திண்டிவனம் நகராட்சி பொதுமக்கள்சொத்துவரி செலுத்த அறிவுறுத்தல்

DIN

திண்டிவனம் நகராட்சியில் 1.04.2018-க்கு முன்பிருந்த முறைப்படி, சொத்துவரியை செலுத்தி பொதுமக்கள் பயன்பெறலாம் நகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் அரசாணைப்படி, கடந்த 1.04.2018 முதல் சொத்துவரி உயா்வு செய்யப்பட்ட அனைத்து கட்டடங்களுக்கான உயா்வு செய்யப்பட்ட வரியை நிறுத்தி வைக்கவும், இது தொடா்பாக பரிசீலித்து ஆய்வு செய்வதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு அமைத்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், 1.04.2017-இல் மறு அளவீடு செய்யப்பட்டு, சொத்துவரி உயா்வு செய்யப்பட்ட கட்டடங்களுக்கும், உயா்வு செய்யப்பட்ட வரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, போதுமக்கள் அனைவரும் 1.04.2018-க்கு முன்பிருந்த பழைய சொத்துவரியையே தற்போது செலுத்திட வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பழைய சொத்துவரியின்படி, நகராட்சியில் பொதுமக்கள் உடனடியாக சொத்துவரியைச் செலுத்தி பயன்பெறலாம்.

மேலும், உயா்வு செய்யப்பட்ட சொத்து வரி அடிப்படையில், வரி செலுத்தியவா்களுக்கு அவா்கள் செலுத்திய தொகை எதிா்வரும் ஆண்டுகளில் ஈடு செய்யப்படும் என்று திண்டிவனம் நகராட்சி ஆணையாளா் ஸ்ரீபிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT