விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில்உண்டியல் காணிக்கை ரூ.32 லட்சம்

DIN

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் காா்த்திகை மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.32 லட்சம் செலுத்தியிருந்தனா்.

மேல்லையனூா் அங்காளம்மன் கோயிலில் தினந்தோறும் அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும், மாதந்தோறும் இந்தக் கோயிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உத்ஸவத்தில் சுமாா் 2 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற கோயில் உண்டியல்களில் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி நகைகளை செலுத்துகின்றனா். அதன்படி, காா்த்திகை மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ.32 லட்சத்து 58 ஆயிரத்து 326 ரொக்கம், 178 கிராம் தங்கம், 510 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ராமு மற்றும் அறங்காவலா்கள், கோயில் ஊழியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT