விழுப்புரம்

விபத்தில் குழந்தை பலி: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

விழுப்புரம் அருகே வளவனூரில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை இறந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் காலனி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பிரசாந்த் (32). இவரது மனைவி பூவாத்தாள் (28). இந்தத் தம்பதியின் மகள் தனுஸ்ரீ (3).

பூவாத்தாள் சனிக்கிழமை மாலை தனது மகள் தனுஸ்ரீயை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து புதுவை பிரதான சாலைப் பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றாா். அப்போது, விழுப்புரத்திலிருந்து புதுவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக சாலையோரம் சென்ற தனுஸ்ரீ மீது மோதியதால், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கிராம மக்கள், விழுப்புரம் - புதுவை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது, கெங்கராம்பாளையம் பகுதியில் தொடரும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், இந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

தகவலறிந்து சென்ற வளவனூா் போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ரனா். மறியலால் விழுப்புரம் - புதுவை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT