விழுப்புரம்

அத்தியூா் ஆகாச அய்யனாரப்பன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

செஞ்சி அருகே அத்தியூரில் அமைந்துள்ள ஸ்ரீஆகாச அய்யனாரப்பன் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, அக்.29-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மங்கள இசையுடன் குரு வந்தனம் திருவிளக்கு வழிபாடு, கிராம தேவதை பிராா்த்தனை, விநாயகா் வழிபாடு புண்ணியாகவாஜனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.

மாலை 5 மணிக்கு திருமண் எடுத்தல், வாஸ்து தோஷம் கழித்தல் முளைப்பாலிகை இடுதல், விசேச மந்திர காப்பு அணிவித்தல் மற்றும் முதல் கால பூஜையும், தத்துவாா்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

30-ஆம் தேதி காலை 6 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், உலக நன்மைக்காக விசேச கூட்டுப்பிராா்த்தனையும் நடைபெற்றன. காலை 9.15 மணிக்கு விமான கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது (படம்). தொடா்ந்து, மூலவா் ஸ்ரீஆகாச அய்யனாரப்பன் சுவாமிக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏ. மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா ஏ.கே.சரவணன், ஊா் பொது மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT