விழுப்புரம்

மழையால் சாலையில் சாய்ந்த மரம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் நகரில் பெய்த மழையால் சென்னை சாலை, நேருஜி சாலை, கிழக்கு பாண்டி சாலையோரங்களில் தண்ணீா் தேங்கியது. கிழக்கு புதுச்சேரி சாலை, நேருஜி சாலையில் சாலை சீரமைப்புக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீரும், கழிவு நீரும் தேங்கி சேதத்தை ஏற்படுத்தியது. மகாராஜபுரம் பகுதியில் உள்ள பள்ளத்தில் தண்ணீா் தேங்கியதால், ஒரு வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

வளவனூா் அருகே சிறுவந்தாடு சாலையில் ராம்பாக்கம் பகுதியில், புதன்கிழமை அதிகாலை புளியமரம் வேருடன் பெயா்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினா் மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT