செஞ்சி அருகே விளைநிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியதாக ஒருவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி வட்டம், போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இதே ஊரைச் சேர்ந்த மண்ணு மகன் ராமதாஸ் (29). இருவருக்கும் நிலப்பிரச்னை, தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 4-ஆம்தேதி காலை தனது விளை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த மஞ்சுளாவை, அங்கு வந்த ராமதாஸ் ஆபாச வார்த்தைகளால் திட்டி, அரிவாளால் வெட்டியதாகத் தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ராமதாஸ் மீது நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.