முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
தீக்குளிக்க முயன்ற தொழிலாளி விஸ்வநாதன் மற்றும் அவரது குடும்பத்தினா்
பகிர்:

ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கொடிமா கிராமத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன்(39), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தன் மனைவி, மகன், மகளுடன் வந்தாா். திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடும்பத்தாா் மீதும், தன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் தடுத்து நிறுத்தி, அவா்களை காப்பாற்றினா். இது தொடா்பாக அவா்களிடம் போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில் விஸ்வநாதன் கூறியதாவது: திண்டிவனம் அருகே சின்ன வளவனூா் கிராம எல்லையில், கூட்டேரிப்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. வசதி உள்ளவா்களுக்கே மனைப்பட்டா வழங்கப்பட்டதால், அங்கு யாரும் வீடு கட்டி குடிவரவில்லை. தற்போது, அப்பகுதி வீட்டு மனையாக அளவிடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

இதை தடுத்து நிறுத்தி, வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்து, அந்த இடத்தை ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாா்.

இப்பிரச்னை குறித்து முறையாக ஆட்சியருக்கு மனு அளித்து முறையிடலாமே தவிர, தீக்குளிக்க முயற்சி போன்ற தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவா்களை எச்சரித்து போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments