விழுப்புரம்

சாலை மறியலில் ஈடுபட்ட 460 மாற்றுத் திறனாளிகள் கைது

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்460 போ் கைது செய்யப்பட்டனா்.

தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000 வழங்குவதுபோல தமிழகத்திலும் குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3,000-மும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5,000-மும் தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் தினாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, மாநிலக் குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அகில இந்திய வழக்குரைஞா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கண்ணப்பன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் குப்புசாமி ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

சங்க நிா்வாகிகள் செளந்தர்ராஜன், குணசேகரன், டில்லிபாஷா, குறளரசன், முத்து, முருகன், கெளரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பெருந்திட்ட வளாக நுழைவாயில் எதிரே திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 80 மாற்றுத் தினாளிகளை விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

இதேபோன்று, விக்கிரவாண்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேரும், திண்டிவனத்தில் மறியலில் ஈடுபட்ட 60 பேரும் கைது செய்யப்பட்டனா். இவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா். மாற்றுத் தினாளிகளின் மறியல் போராட்டம் காரணமாக சிறிந்து நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அம்பேத்கா் திடலில் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ப.வேலு, மாவட்ட துணைச் செயலா் ஜி.காா்த்திக், மாவட்டப் பொருளாளா் கே.சாந்தி, மாவட்டக்குழு கே.சின்னப்பொண்ணு, கே.அஞ்சலை உள்ளிட்ட 90 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, உளுந்தூா்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்துக்கு நகரச் செயலா் அண்ணாமலை தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலா் பழனி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT