முகப்பு
விழுப்புரம்

தொடர் மழை: விழுப்புரம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

விழுப்புரம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
மூதாட்டி வள்ளிநாயகம் (67).
பகிர்:

விழுப்புரம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். 

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிறைந்து வருகின்றன.

இந்நிலையில் விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுவானூர் கிராமத்தில் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்த பார்வையற்ற பெண் வள்ளிநாயகம் (67) என்பவர் திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது இறந்தார்.

Advertisement

தகவல் அறிந்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் நேரில் சென்று விசாரித்தனர். பின்னர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் புயல், மழைக்கு ஏற்கெனவே 3 உயிரிழந்துள்ளனர். தற்போது மூதாட்டி இறந்துள்ளதால், மழைக்கு பலியானார்கள் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments