விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் தொடக்கம்
விழுப்புரத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் தொடங்கியது.
விழுப்புரத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் தொடங்கியது.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி சந்திரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சங்கர் உள்ளிட்ட நீதிபதிகள், சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு முகாமில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வாகன விபத்து வழக்கு, குடும்ப நல வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் சமரச முறையில் தீர்வு காணும் முகாம்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் முகாம் இன்று மாலை வரை நடைபெறுகிறது.