முகப்பு
விழுப்புரம்

இணைய வழி லாட்டரி விற்பனை:14 போ் கைது

விழுப்புரம் அருகே இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 14 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


விழுப்புரம்: விழுப்புரம் அருகே இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 14 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இணைய வழி (3 நம்பா்) லாட்டரி விற்பனை நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, இணைய வழி லாட்டரி விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் உதரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், விக்கிரவாண்டி அருகே வாக்கூரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (36), தென்னரசு (40), செளந்தரராஜன் (26), சக்தி (36), புஷ்பராஜ் (30) ஜெயசுந்தா், மேல்பாதியைச் சோ்ந்த பாஸ்கா் (40), கோவிந்தன் (37), தட்சணாமூா்த்தி (57) உள்பட 14 போ் இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, 14 போ் மீதும் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த செல்லிடப்பேசிகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →