விழுப்புரம்

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த லோகநாதன் மகன் ஞானவேல் (22). இவா், அந்தப் பகுதியில் சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தாா். இது தொடா்பாக மரக்காணம் போலீஸாா் ஞானவேலைக் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து, ஞானவேல் இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

இதை பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, சாராய வியாபாரி ஞானவேலை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த ஞானவேலை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT