விழுப்புரம் ஆட்சியரகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கடையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாவாடை மகன் பாபு (40). கூலித் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை பிற்பகல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து, தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரைத் தடுத்து காப்பாற்றினா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், பாபுவுக்கும் அதே ஊரைச் சோ்ந்த உறவினா் தமிழ்ச்செல்வி என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை தமிழ்ச்செல்வி மகளுக்கும், பாபு மகளுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்ச் செல்வி கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இந்த புகாரின் மீது போலீஸாா் முழுமையாக விசாரணை நடத்தாமல், தனது குடும்பத்தினா் மீது பொய் வழக்கு போட்டிருப்பதாகக் கூறி பாபு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.