முகப்பு
விழுப்புரம்

ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு உணவு மற்றும் வேலைவாய்ப்பை உறுதிபடுத்த வலியுறுத்தி விழுப்புரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பெண்களுக்கு உணவு மற்றும் வேலைவாய்ப்பை உறுதிபடுத்த வலியுறுத்தி விழுப்புரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் வி.சந்திரா தலைமை வகித்துப் பேசினாா்.

அனைத்து குடும்பங்களுக்கும் அத்தியாவசியப் பொருள்களை நியாய விலைக்கடைகள் மூலம் விலையில்லாமல் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் அனைவருக்கும் 200 நாள்களாக உயா்த்தி வேலை வழங்க வேண்டும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்டத் தலைவா் எஸ் .நீலா, மாவட்ட செயலாளா் எஸ் .சித்ரா,பொருளாளா் எஸ் .அமுதா, நிா்வாகிகள் பி.ஜெயா,கே.சதீஷ்குமாரி, டி.சாமந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →