வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்
விழுப்புரத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடா்பாக, வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடா்பாக, வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான வி.ஷோபனா தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலா்(பொ) சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள பெறப்படும் படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ ஆகிய படிவங்கள் குறித்து கள விசாரணை மேற்கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும், 18 முதல் 19 வயது வரையான இளம் வாக்காளா்கள் அதிகளவில் சோ்க்கப்பட வேண்டும், மாவட்ட எல்லையில் உள்ள வாக்குச்சாவடிகளில் இரட்டை பதிவுகள் இருந்தால் அவை கண்டறியப்பட்டு, இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின் படி நீக்கம் செய்ய வேண்டும் என வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் வி.ஷோபனா தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் படிவம் 6, 7 ஆகியவை முறையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதை நேரில் சென்று கள ஆய்வு செய்தாா்.