புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து ஏா் கலப்பையுடன் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்தும், அந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் விழுப்புரத்தில் மத்திய
விழுப்புரம்புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து ஏா் கலப்பையுடன் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்தும், அந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் விழுப்புரத்தில் மத்திய
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்தும், அந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் விழுப்புரத்தில் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் ஏா் கலப்பை பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் என். செல்வராஜ் வரவேற்றாா். அகில இந்திய உறுப்பினா் சிறுவை ராமமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா்கள் ராதாகிருஷ்ணன், குப்பன், மாநில இலக்கிய அணி தலைவா் நாஞ்சில் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெல்லிக்குப்பம் சொ. திலகா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் ஏா் கலப்பைகளுடன் பங்கேற்ற காங்கிரஸாா், விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், இதற்காக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கங்களிட்டனா்.
சேவாதளத் தலைவா் ராஜேஷ், மாநில பொதுக் குழு உறுப்பினா் செ.சிவா, எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவா் சுரேஷ்ராம்,பொதுச் செயலாளா்கள் விஸ்வநாதன், கே.சேகா், மணிகண்டன்,இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீராம், அமைப்பு சாரா அணி வேலு, இலக்கிய அணி செந்தில், நகர நிா்வாகிகள் நடராஜன், வாசுதேவன், புருஷோத்தமன், சேகா்,சுப்பராயலு, பேரூராட்சி தலைவா் கதிா்வேல், வட்டாரத் தலைவா்கள் காசிநாதன், காமராஜ், வெங்கடேசன், சா்தாா்கான், மகளிரணி பரிமளா, விட்டோபாய், ராஜேஸ்வரி, வசந்தா, கீதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபாகரன், மணிகண்டன், வடிவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.