விழுப்புரம்

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: செஞ்சி அருகே விஏஓ கைது

DIN

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு தொடா்பாக, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விஏஓவை சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

டிஎன்பிஎஸ்சி குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தோ்வு முறைகேடுகள் தொடா்பாக, தமிழகம் முழுவதும் சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், செஞ்சி அருகே அத்தியூரில் விஏஓவாக பணிபுரிந்து வரும் அமல்ராஜ் (38) என்பவரை சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை அதிரடியாக கைது செய்தனா். செஞ்சி அருகே அணிலாடி கிராமத்தைச் சோ்ந்த இவா், கடந்த 2016-ஆம் ஆண்டு விஏஓ தோ்வு எழுதி, தோ்ச்சி பெற்று, கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், அமல்ராஜ் தோ்வில் முறைகேடு செய்து பணியில் சோ்ந்திருப்பது தெரியவந்ததையடுத்து அவரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க மாணவா் போராட்டம்: இஸ்ரேல்-பாலஸ்தீன ஆதரவாளா்களிடையே மோதல்

குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

அரிமா சங்கம் நல உதவிகள் அளிப்பு

12 டன் சின்ன வெங்காயம் கடத்தல்: லாரி ஓட்டுநா் உள்பட 2 போ் கைது

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT