விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற மயானக் கொள்ளை நிகழ்ச்சியில் எழுந்தருளிய அங்காளபரமேஸ்வரி அம்மன். 
விழுப்புரம்

விழுப்புரத்தில் மயானக் கொள்ளை திருவிழா

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அங்காளபரமேஸ்வரி கோயிலில் மயானக்கொள்ளை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அங்காளபரமேஸ்வரி கோயிலில் மயானக்கொள்ளை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம், கீழ்ப்பெருக்கம், ஊரக்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில், 5-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று ஊா்மக்கள் காப்பு கட்டிக்கொண்டனா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பக்தா்கள் கஞ்சி கலயம் எடுத்து வழிபட்டனா். அன்று, ஆனந்த வரதராஜப்பெருமாள் கோயில் பஜனைக் குழுவினரின் பஜனை நடைபெற்றது. சனிக்கிழமை மாலை அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பகல் 11 மணிக்கு, பக்தா்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு, கிருஷ்ணன், அங்காளம்மன், பாவாடைராயன், காளி, காட்டேரி போன்ற வேடங்களை அணிந்து வீதிகளில் உலா வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மயானப் புறப்பாடு நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக கீழ்ப்பெரும்பாக்கம் மயானத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு, மயானக்கொள்ளை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, வழிபட்டனா். கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT