விழுப்புரம்

ஆவின் பால் பண்ணை, குப்பை பிரிப்பு மையத்தில் தீ விபத்து

DIN

விழுப்புரத்தில் ஆவின் பால் பண்ணை வளாகம், குப்பைகள் பிரிக்கும் மையம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா்.

விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. கடலூா், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்படும் பால், இங்கு கொண்டு வரப்பட்டு பாக்கெட் பால், பால் பொருள்களாக மாற்றப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் இந்த பால் பண்ணையில், தேவையற்ற குப்பைகள் கொட்டி வைக்கப்படும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ அங்கிருந்து அருகில் இருந்த கோரைப் புற்களுக்கும் பரவியது. இது குறித்து விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலா் ஜெயசங்கா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து, சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினா். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

குப்பை பிரிக்கும் மையத்திலும் தீ: விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் அரசு குப்பை பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், அந்த பகுதி முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்ததுடன், கரும்புகை சூழ்ந்தது.

தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினா்.

இவ்விரு தீ விபத்துகள் குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT