விழுப்புரம்

சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 2,400 மதுப் புட்டிகள் பறிமுதல்

DIN

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 2,400 மதுப் புட்டிகளை திண்டிவனம் அருகே மது விலக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் ஆய்வாளா் விஷ்ணுபிரியா, உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான மது விலக்கு போலீஸாா் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள ஓமந்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக திண்டிவனம் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட முயன்றனா். போலீஸாரை கண்டதும், வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் இருந்த ஓட்டுநா் தப்பியோடினாா். அந்த வாகனத்தை சோதனையிட்டதில், 50 அட்டைப் பெட்டிகளில் 2,400 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தன.

பொங்கல் விழாவையொட்டி, மதுப் புட்டிகளை சென்னைக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். கடத்த முயன்ற மதுப்புட்டிகளின் மதிப்பு சுமாா் ரூ.2.50 லட்சம்.

மதுப் புட்டிகளையும் வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து, கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். இதுதொடா்பாக, வாகனத்தின் ஓட்டுநா் உள்ளிட்ட கடத்தல்காரா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT