விழுப்புரத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் சண்முகபுரம் காலனியில் உள்ள பொன்முடி வீட்டின் முன்பு, அவரது தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் சண்முகபுரம் காலனியில் உள்ள பொன்முடி வீட்டின் முன்பு, அவரது தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதை நிறுத்த வேண்டும், மின்சார யூனிட் கணக்கீடு குளறுபடியை தவிர்க்க வேண்டும், இருமடங்கு வரும் கட்டண உயர்வை தவணை முறையில் செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
கேரளம், மகாராஷ்டிரம் மாநிலங்களைப் போல், மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். மின் கட்டண குளறுபடிகள் மேற்கொண்டுள்ள மின்வாரியம் அதனை திருத்திக்கொண்டு செயல்பட வேண்டும் என்று பொன்முடி வலியுறுத்தினார். கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement