அரசு மருத்துவருக்கு கரோனா தொற்றுவிழுப்புரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
விழுப்புரம் அருகே அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், ஆரம்ப சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு மருத்துவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், ஆரம்ப சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், இருவேல்பட்டு கிராமத்தில், திருச்சி நெடுஞ்சாலையோரம், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் பெண் மருத்துவா் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், அவருடன் பணியிலிருந்த 3 ஊழியா்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.
இதன் காரணமாக, இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. புறநோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சிகிச்சை நிறுத்தப்பட்டு, 3 நாள்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.